உயிர் நிகர் தமிழ்

உலகெலாம் நம் தமிழர் பரவியுள்ளனர்,

உலகினரையெல்லாம்

கேளிர் எனக் கொள்கிறது தமிழ்மனம்…

உலகோடு ஒட்டுறவு கொண்டாலும்

என்றென்றும் தம் சீரளமைத் திறத்தோடு

நடைபயில்கிறது தமிழ்மொழி..

 

வளமையும் வல்லமையும் கொண்ட தமிழ்,

காலம்தோறும் பல்வகைப்பட்ட

பண்பாட்டு, அரசியல் படையெடுப்புகளை

எதிர்கொண்டும் வருகிறது…

 

தமிழின் வளர்ச்சிக்காக,

தம் உயிரை உருக்கி,

வாழ்வை இயக்கமாக்கி

வாழ்ந்து சிறந்தவர்கள் ஆயிரம் ஆயிரம்…

தமிழுக்கு எதிரான

மொழித் திணிப்புகளுக்கு எதிராய்

உயிரை ஈந்தவர்கள் பல நூறு…

 

உயிரை உணர்வை வளர்க்கிறது தமிழ்…

வாழ்வாய் வளமாய் செழிக்கிறது தமிழ்…

இலக்கியத்திலும் இசையிலும் வழிபாட்டிலும்

தனித்தியங்குகிறது தமிழ்…

மொழிமீதான இந்நிலத்தின்

ஒப்பிடுவதற்கில்லாப் பற்றினை உணர்ந்துகொள்ள

நீண்ட நெடிய வரலாற்றின்

தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச் சிலப் பக்கங்கள் இவை…

 

ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில்

தமிழோடு அதன் கிளைமொழிகளையும் காக்க

களம்கண்டனர் தமிழர்கள்…

காலங்கள் மாறினும் காட்சிகள் மாறவில்லை…

இந்திய துணைக்கண்டத்தின்

ஒவ்வொரு மொழிக்கான உரிமைக்குரலையும்

தமிழ்நிலமே உரத்து ஒலிக்கிறது!

 

    உயிர் நிகர் தமிழ் சிறப்பு இணையப் பக்கம்

  • Share this theme
  • instagram
  • facebook
  • linkedin
  • twitter

Uploaded By

Tamil virtual academy